ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான காரணிகள் மற்றும் விளக்கங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று (16) வெளியாக்கவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
இதனை அடுத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு, அண்மையில் கூடி, சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை எனவும், அவருடன் கலந்துரையாடி, அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள விடயங்களை அமுலாக்குவதற்கான கால வரையறைகளைத் திட்டமிடவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதில் சஜித் பிரேமதாசவை தமிழரசுக் கட்சி ஆதரிப்பதற்கான காரணங்கள் மற்றும் இருதரப்புக்கும் இடையிலான இணக்கப்பாடுகள் அடங்கி இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.








