கிளாலி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 14 டிப்பர் மணல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் செனவிரட்ண ,அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி கிளாலி பகுதியில் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீ.குலரட்ண தலைமையில் பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிளாலி பகுதியில் குறித்த 14டிப்பர் மணலையும் பொலிஸார் மீட்டனர்.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் எமது பிராந்திய செய்தியாளர்  தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here