சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மான்செஸ்டர் மற்றும் பிளாட்டினம் வகை சிகரெட்டுகளை வைத்திருந்த நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் விசேட அதிரடிப்படைத் தளபதியின் அறிவுறுத்தல்களின்படி விசேட அதிரடிப்படை குழு ஒன்று நேற்று கந்தானை பொலிஸ் பகுதியில் சோதனை நடத்தியது.

இச் சோதனையின்போது வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 800 மான்செஸ்டர் சிகரெட்டுகள் மற்றும் பிளாட்டினம் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

கந்தானையைச் சேர்ந்த 55 வயதுடையவரை கைதுசெய்து மேலதிக விசாரணைகளுக்காக கந்தானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here