தர்மபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குளக்கரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் ஒருவரும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் 2613 லீற்றர் கோடாவும் மற்றும் 24 லீற்றர் கசிப்பும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 04.09.2024 கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








