Thursday, July 23, 2026
No menu items!

பொறுப்பதிகாரி

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல பயன்படுத்திய படகு கைப்பற்றப்பட்டது!

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல பயன்படுத்தியதாகக் கூறப்படும் படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் மறைக்கப்பட்டிருந்த அந்தப் படகு இன்று (24) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைகளில், குறித்த படகு ஏ. ஆனந்தன் என்ற நபருக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது....

வழி மாறிச் சென்ற பயணி உயிர்மாய்ப்பு செய்து கொண்ட துயரச் சம்பவம்!

கொழும்பு முதல் வெலிமட வரை பயணித்த நபர் ஒருவர் பேருந்தில் உறங்கியதால், தனது இலக்கை தவறவிட்டு, அறியப்படாத ஊர் ஒன்றில் இறங்கிய வேளை அவரை திருடன் எனத் தவறாக எண்ணி, கிராமவாசிகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதல் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அறிந்த குறித்த நபர், மனமுடைந்து உயிர்மாய்ப்பு செய்து...

பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்!

பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியதுள்ளது. இச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி மரணம்..!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஏ.டி.என். மஹகுமார (52) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். களுத்துறை பகுதியைச் சேர்ந்த இவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவார். வெலிசர மார்பு நோய் வைத்தியசாலையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (09) காலை அவர் உயிரிழந்தார். சுமார் 15 ஆண்டுகள்...

பொலிஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல் – வெளியான பின்னணி..!

கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “மோதரை நிபுன” என்று அழைக்கப்படும் நபரொருவரினால் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை, கல்பொத்த பிரதேசத்தில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றிற்கு...

நானுஓயா பொலிஸ் நிலையத்தில் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் திறப்பு!

நானுஓயா பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (20) காலை மகளிர் மற்றும் சிறுவர் - துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் ,உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்தில் தனியான அறை ஒன்று ஒதுக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.என் ஏகநாயக்க மற்றும் நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக...

வவுனியாவில் 9000 சுவரொட்டிகள் பொலிஸாரால் நீக்கம்!

எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் இன்று(18.09.2024) எனவே இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை நீக்கும் பணிகளை வவுனியா...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர்கைது!

தர்மபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குளக்கரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர் ஒருவரும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 2613 லீற்றர் கோடாவும் மற்றும் 24 லீற்றர் கசிப்பும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் 04.09.2024 கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை...

போக்குவரத்து பொலிஸாருக்கு மகிழ்ச்சித் தகவல்…!!

வீதிகளில் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மாதாந்த கொடுப்பனவு 1800 ரூபாவிலிருந்து 6000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. பரிசோதகர் தர உத்தியோகத்தர் ஒருவரின் மாதாந்தக் கொடுப்பனவு 2000 ரூபாவிலிருந்து 7000 ரூபாவாகவும், மோட்டார்...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img