தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு அன்று (23.03.2025) கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதி சுற்றி வளைப்பில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து தப்பியோடி உள்ளத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணம் மற்றும் 2250 போத்தல்கள், கோடா, மற்றும் 20 லீற்றர் கசிப்பும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் தர்மபுரம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








