கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரமோட்டை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.

மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவியந்திரங்கள் மற்றும் நான்கு சந்தேக நபர்களை கைது செய்து இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இராமநாதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here