கிளப் வசந்த உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர்கள் இருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒரு சந்தேநபர், கொரத்தோட்டை பிரதேசத்தில் இருந்து வெலிஹிந்த பிரதேசத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களையும் கார் சாரதியையும் வேன் ஒன்றில் ஏற்றிச் சென்று, வேனை புளத்சிங்கள பிரதேசத்திற்கு கொண்டு சென்று மறைந்தவர் எனவும், மற்றைய சந்தேகநபர் வெலிஹிந்த பிரதேசத்தில் இருந்து தெற்கு அதிவேக வீதியின் ஊடாக திக்வெல்ல பிரதேசம் வரை சந்தேகநபர்களை பேருந்தில் அழைத்துச் சென்று, குறித்த பேருந்தை செல்லக்கதிர்காமம் பகுதியில் மறைத்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here