இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்வாடிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

இரத்தினபுரி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பெல்வாடிய பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 1,758 லீற்றர் கோடா மற்றும் 22.5 சட்டவிரோத மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here