நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் குழுக் கடமைகளில் ஈடுபட்ட அலுவலர்களுடான  கலந்துரையாட லானது யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்  (26.09.2024) மாலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், ஜனாதிபதித் தேர்தலிலானது சுமூகமாக நடைபெற்றுள்ளதாகவும்,  இத் தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்ட குழுக்களின்  உத்தியோகத்தர்கள் தமக்குரிய கடமைகளை கூட்டு முயற்சியூடாக  சிறப்பாக ஒருங்கிணைந்து செயற்பட்டமைக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில்  பங்குபற்றிய தேர்தல்கள் உதவி ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களும் தேர்தல் கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர் களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் குழுக்களின்  உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here