வெல்லம்பிட்டிய, பிரந்தியாவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரித்ததற்காக சீன நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய காவல்துறை மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படை (STF) இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, ​​குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

பிராந்தியாவத்தே பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் அந்த சீன நபர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபரிடமிருந்து மொத்தம் 300,018 மில்லி எதனோல் மற்றும் 67,5000 மில்லி சட்டவிரோத மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேக நபர் கொழும்பு தாமரை கோபுர திட்டத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெல்லம்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here