ஹபரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்சிறிகம பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (12.12.2024) காலை இடம்பெற்றுள்ளது.
ஹபரணை , லக்சிறிகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமானது பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





