ஒக்டோபர் 19ம் திகதிக்கும் 24ம் திகதிக்கும் இடையில் அறுகம்குடாவில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ள ஊடகங்கள் சந்தேகநபர்களில் இருவர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அறுகம் குடாவில் உள்ள அவர்களது வழிபாட்டுதலத்தில் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டிருக்க கூடிய  பெரும் ஆபத்தை பொலிஸார் தடுத்துநிறுத்தியுள்ளனர்.

ஓக்டோபர் 19 முதல் 24 ம் திகதி  இந்த தாக்குதலிற்கு திட்டமிட்டிருந்தனர்இந்த வாரத்தில் இஸ்ரேலியர்கள் பெருமளவில் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறவிருந்தது என புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடொன்று இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு எவ்வளவு தூரம் ஆதரவு வழங்கியது எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொள்வதற்கு  பயிற்சிகள் வழங்கப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here