பெரிய மனிதர் அவர் மகன் என்பதெல்லாம் சட்டத்தின் முன் முக்கியமல்ல என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஞாயிற்றுக்கிழமை (13) கஹட்டகஸ்திகிலியவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் பொது மக்களிடையே உரையாற்றினார்.

இதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், பொருளாதார அபிவிருத்தி, விவசாயம் மற்றும் மனித-யானை மோதல் ஆகியவை குறித்தும் அவர் கவனம் செலுத்தினார்.

ஊழல் தொடர்பில் கைது செய்வதில் எந்த வரம்பும் இல்லை என தெரிவித்த அவர்,கைதுகளுக்கு வரம்பு விதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டமைக்கு பதிலளித்த போது, பொதுப் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான நடவடிக்கையில் “எந்த வரம்பும் இருக்காது” என்றார். விசாரணைகள் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்கள் வழியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை “பெரிய மனிதர், அவரது மகன் அல்லது மனைவி” என்பது முக்கியமல்ல எனவும் ஊழல் தொடர்பில் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் தான் தலையிடப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

“விசாரணை மற்றும் நீதித்துறை நிறுவனங்களுக்கு சுதந்திரமும் வளங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் திருடர்களுக்கு அரசியல் கதவுகள் மூடப்பட வேண்டும் என்றும் பொதுச் சொத்தை திருடியவர்கள் திரும்பத் திரும்ப பாராளுமன்றத்திற்கோ அரசியல் மேடைகளுக்கோ வராத அரசியல் கலாச்சாரத்தை இலங்கை உருவாக்க வேண்டும் என்றும் திசாநாயக்க தெரிவித்தார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here