சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயமாக்குவதை மேற்பார்வையிட எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி அங்கு சென்றுள்ளார்.

விசேட கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் நிர்வாகத்துடன் கலந்துரையாடியதாக எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here