ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளராக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சபாநாயகராக சிரேஷ்ட உறுப்பினர் நிஹால் கலபத்தியை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே இவர்கள் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.








