இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு விந்தணுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்நாட்டில் உள்ள விதிகளின்படி, ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்துக்கு மேல் கொடுக்க முடியாது. ஆனால், விந்தணுவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வரம்பு எதுவும் இல்லை. இதைப் பயன்படுத்தி விந்தணு தானம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த காலங்களில் அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்து விந்தணு மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்து வந்தது. அதன்பின் நிலைமை முற்றிலும் மாறியது.
2019 மற்றும் 2021-க்கு இடையில் மட்டும் 7,542 ஸ்ட்ரா விந்து இங்கிலாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விந்தணு மற்றும் முட்டை வங்கியான கிரையோஸ் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் ஒரு கிளையைத் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதியில் 90 சதவீத பங்கைக் கொண்டது ஐரோப்பிய விந்தணு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.








