கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் சமுர்த்தி திணைக்களத்தின் சமூக வேலைத்திட்டம் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் 2029 ஆம் ஆண்டுக்கான தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றைய தினம் 25.02.2025 மாவட்ட செயலாளர் எஸ். முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

சமூக வலுவூட்டல் ஊடாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நலன்புரித் திட்டங்களைப் சிறந்த முறையில் மேற்கொண்டு வறுமையை ஒழித்தல் வலுவூட்டலின் முக்கிய துறைகள் மற்றும் அஸ்வெசும, மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் தெரிவுகளும் சிறந்த முறையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் என்று இவ் கலந்துரையாடலில் தெலிவுட்டப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயம்.

இந்தக் கலந்துரையாடலில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்,

மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

[கிளிநொச்சி நிருபர் – பரமசிவன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here