90 இலட்சம் ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரான சலோச்சன கமகே உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்களும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன் சந்தேக நபர்களின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.








