முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றார்.
அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஆன் டி லிவேரா அம்மையாரும் புறப்பட்டு சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இன்று அதிகாலை 01.10 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸின் SQ-469 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதற்கிடையில், ஷிராந்தி ராஜபக்ஷ நேற்று (15) உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னைய ஆட்சி காலங்களில் இடம்பெற்ற குற்ற செயல்கள் தொடர்பில் அவர் மீது விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறு நாட்டில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








