ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக அதிகளவான விண்ணப்பங்கள் குருநாகல் மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி கிடைபெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை 76977 ஆகும். குருநாகல் மாவட்டத்தில் அதிகளவான முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸ் சேவையில் இருப்பதே இதற்குக் காரணம் என தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கு அடுத்தப்படியாக அதிகளவான விண்ணப்பங்கள் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 55191 பெறப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தபால் மூல வாக்களிக்க 712319 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here