14 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்ட சிறுமி கடந்த 02 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தாய் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (05.12.2024) முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் , வீடொன்றில் உள்ள மலசல குழியிலிருந்து சிறுமியின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் சிறுமியை கொலை செய்து  சடலத்தை மலசல குழியில் வீசியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரான சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here