சீனாவின் தென் மேற்கு சிச்சுவான் மாகாணம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் நிலச்சரிவு காரணமாக பகுதியளவில் இடிந்து வீழ்ந்துள்ள சம்பவம் பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஎர்காங் (Maerkang) நகரில் அமைந்துள்ள 758 மீட்டர் நீளமுள்ள ஹோங்க்கி (Hongqi) பாலம் தான் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டது.
பாலத்தின் அருகிலுள்ள வீதிகள் மற்றும் கட்டடங்களில் முன்பே விரிசல்கள் காணப்பட்டதால், அதிகாரிகள் திங்கட்கிழமை பிற்பகல் முதல் பாலம் மூடப்பட்டு, போக்குவரத்தை மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பியிருந்தனர்.
பாலம் இடிந்தபோது அதன்மேல் ஒரு பாரவூர்தி இருந்ததாகவும், அதிலிருந்த சாரதி பத்திரமாக மீட்கப்பட்டார் என்றும் சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்தில் எந்த உயிரிழப்புகளும் பதிவாகவில்லை, ஆனால் பாலத்தின் இடிபாடு காரணமாக உள்ளூர் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தற்போது பாலத்தின் கட்டமைப்பு மற்றும் நிலச்சரிவு காரணங்களை ஆராயும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.








