கிளிநொச்சியில் சீரற்ற வானிலை காரணமாக வீதிகள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு காணப்படுகின்றார்கள்.

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சுமார் 721 குடும்பங்களும் 2476 அங்கத்தவர்களும் 7 வீடுகளும் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளன.
கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 16 கிராமங்களில் 422 குடும்பங்களும் 1554 நபர்களும் மூன்று பகுதி அளவிலான வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 7 கிராமங்களில் 115 குடும்பங்களும் 278 நபர்களும் 3 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் ஐந்து கிராமங்களில் 4 குடும்பங்களும் பத்து நபர்கள் ஒரு வீடும் பாதிக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராமங்களில் 180 குடும்பங்களும் 634 அங்கத்தவர்கள் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமையால் மாவட்டத்தில் உள்ள சிறு குளங்கள் கனகாம்பிகைகுளம், வன்னேரி குளம், பிறமந்தனாரு குளம் ஆகியன வான் பாய ஆரம்பித்துள்ளன.









