அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டை மட்டுப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம் சுகாதார அமைச்சிற்கு முன்பாக முன்னெடுத்த சத்தியாகிரக போராட்டத்தின் போது 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றம் சுமத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட 27 பேர் கைதாகியுள்ளனர்.

இணை சுகாதார பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டை மட்டுப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம் நேற்று முதல் கொழும்பில் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சுகாதார அமைச்சுக்கு முன்பாக இந்த சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மருதானை காவல்துறை பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை சதுக்கம், சுகாதார அமைச்சிற்கு உட்பிரவேசிக்கும் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வீதிகளை மறிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்த மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

அந்த தடை இன்று மாலை வரை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here