Tuesday, July 28, 2026
No menu items!

அரச சேவை

அரச சேவையில் 8,547 புதிய ஆட்சேர்ப்புகள் – அமைச்சரவையின் ஒப்புதல்!

அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில், பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளில் உள்ள 8,547 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின் படி, அதிகபட்சமாக பொது மக்கள் பாதுகாப்பு...

இலங்கையின் மாகாண சபைகளில் 61,835 வெற்றிடங்கள்!

இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். அவற்றில் அதிகபட்சமாக 16,651 வெற்றிடங்கள் மேல் மாகாண சபையில் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார். நாடு தழுவிய சேவைகளுக்கு...

தாதியர்களின் கட்டாய ஓய்வை தடுக்கும் இடைக்காலத் தடை செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

முந்தைய அரசாங்கத்தின் போது, அரச சேவையில் உள்ள நான்கு தரங்களைச் சேர்ந்த தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றுவதைத் தடை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை, உயர்நீதிமன்றம் நேற்று (17) செல்லுபடியாகாததென அறிவித்தது. மேலும், அந்த மனுவை மீண்டும் பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம்...

தாதியர்களின் ஓய்வு வயது 60 ஆகக் குறைப்பு: எதிர்காலத்தில் சேவையியல் சிக்கல்கள் ஏற்படும் என எச்சரிக்கை!

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வூதிய வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும் மோசமடையும் என்று அதன் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக...

சுகாதார அமைச்சிற்கு முன்பாக போராட்டம் – 27 பேர் கைது..!

அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டை மட்டுப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம் சுகாதார அமைச்சிற்கு முன்பாக முன்னெடுத்த சத்தியாகிரக போராட்டத்தின் போது 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றம் சுமத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட 27 பேர் கைதாகியுள்ளனர். இணை சுகாதார பட்டதாரிகளை...

‘GOVPAY’ திட்டம் இன்று முதல் அறிமுகம்!

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'GOVPAY' திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கும், அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.   <!-- -->

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பட்டதாரிகள் 35,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று புதன்கிழமை இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். அவசரமாக நிரப்பப்பட வேண்டிய துறைகளில் பணி வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் கருத்து...

அரச சேவை சம்பள உயர்வுக்காக 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு..!

அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த விஜேபால, அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள்...

இராமநாதன் அர்ச்சுனாவின் மனு விசாரணை ஒத்திவைப்பு!

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எம்.கோபல்லவ முன்னிலையில்...

மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவேண்டும் – வேதநாயகன் நம்பிக்கை..!

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (எல்.டி.எஸ்.பி.) ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக் கொண்ட வளங்கள் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவேண்டும். அரச பணியாளர்கள் மக்களுக்கு விரைவான – அன்பான சேவையை முன்னெடுக்கின்ற ஆண்டாக 2025ஆம் ஆண்டு அமையவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img