மின்னேரியா தேசிய பூங்காவின்  ‘யூனிகொர்ன்’ என்ற பிரபலமான காட்டு யானை, சில நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக  சுற்றாடல் அமைச்சர் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி திங்கட்கிழமை (17/03/2025) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 15 ஆம் திகதி யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம். யானையின் சடலம் வனவிலங்கு அதிகாரிகளால்  திங்கட்கிழமை (17/03/2025) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மின்னேரியா தேசிய பூங்காவில் நன்கு அறியப்பட்ட ஒரு யானையாக இருந்த யூனிகொர்ன் யானை கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்களை அடையாளம் காண வன பாதுகாப்புத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here