விடுமுறை காலத்தில் மின்சார தேவை குறைவாக இருப்பதால், தேசிய மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையை பேணும் நோக்கில் 300 கிலோவாட்டுக்கு மேற்பட்ட கூரை சூரிய மின் திட்டங்களை தற்காலிகமாக செயலிழக்க செய்யுமாறு தேசிய மின் கட்டமைப்பை நிர்வகிக்கும் அரச நிறுவனம் (Pvt) Ltd அறிவிப்பு விடுத்துள்ளது.
இதற்கமைய குறிப்பிடப்பட்டுள்ள கூரை சூரிய மின் திட்டங்களை ஒகஸ்ட் 27 முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும்.
விடுமுறை காலத்தில் மின்சார தேவை குறைவாக காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், தேசிய மின் அமைப்பை சீராக பராமரிப்பதற்காக இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே தொடர்புடைய கூரை சூரிய மின் திட்ட உரிமையாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செயலிழக்கச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.






