பண்டாரகம பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சொகுசு மோட்டார் வாகனத்தில் வென்னப்புவையில் இருந்து கொண்டு வரப்பட்ட10 லட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத மதுபான தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரு சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவு பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிந்தெல்பிட்டிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் வாகனம் ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்தபோது, பின் இருக்கைகள் அகற்றப்பட்டு அதில் மதுபான கொள்கலன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

27,000 மில்லி சட்டவிரோத மதுபானம், 8 பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட மதுபானம் மற்றும்
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட இருவரும் பாணந்துறை கல்துட்டே மற்றும் பாணந்துறை ஹிரண பகுதிகளை சேர்ந்தவர்கள்.

விசாரணையில், இந்த மதுபானம் ஹிரண பொலிஸ் பிரிவை சேர்ந்த ‘சலா’ என்ற மதுபான கடத்தல்காரருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here