நுவரெலியா-ஹட்டன் பிரதான வீதியில் இன்று (06) இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த  நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொகுசு பஸ் மற்றும்  லொறியும் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை 11 மணியளவில்  நுவரெலியாவின் பிளாக்பூல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here