அராலி மேற்கு நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மாள் ஆலயத்தின் வருடாந்த குளிர்த்தி உற்சவமானது நேற்றையதினம் (05/02/2025) வெகு சிறப்பாக நடைபெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் பேச்சியம்மாள், மற்றும் பரிவார தெய்வங்களான பிள்ளையார், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றது. பின்னர் பேச்சியம்மாள் சிங்க வாகனத்தில் எழுந்தருளியாக வீற்றிருந்து உள்வீதியூடாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த உற்சவ கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர். பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here