ஜனாதிபதி நிதியம் இனி சிலருக்கான வரப்பிரசாதமாக இல்லாமல், முழுமையாக மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற மத்திய மாகாண நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் 2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளில் ஒவ்வொரு பாடத்துறையிலும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய அவர், இத்திட்டம் நாட்டின் எதிர்கால தலைமைத்துவத்தையும் மாற்றத்தையும் உருவாக்கும் என நம்புவதாகக் கூறினார்.
முன்னதாக ஜனாதிபதி நிதியம் ஒரு குழுவினரின் நலனுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது அது மக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அதேவேளை, மனித வள மேம்பாட்டை அரசாங்கம் தனது முதன்மை இலக்காகக் கொண்டு, கல்வியில் பண ரீதியிலும் பிற துறைகளிலும் முதலீடு செய்து வருவதாகவும், உலகத்தை மாற்றக்கூடிய குடிமக்களை உருவாக்குவதே நோக்கமாக உள்ளதாகவும் என அவர் வலியுறுத்தினார்.








