Wednesday, July 22, 2026
No menu items!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அமெரிக்க தூதுவருடன் பிரதமர் சந்திப்பு : கல்வி மற்றும் கலாசார ஒத்துழைப்புகள் குறித்து ஆலோசனை!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படையணி (Peace Corps) கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத் திட்டம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தூதுவர் விளக்கமளித்தார். மேலும்,...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான பிரதிநிதி எவான் பாபஜியோர்ஜியு (Evan Papageorgiou), நேற்று (29) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அரசாங்கம் முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு திட்டத்தின் முன்னேற்றம், நிர்வாகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள், மற்றும் ஊழலைக் குறைக்கும் முயற்சிகள் தொடர்பாக அவர் தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், வரிக்...

ஜனாதிபதி நிதியம் இனி 100% மக்களுக்காக : பிரதமர் ஹரிணி அமரசூரிய!

ஜனாதிபதி நிதியம் இனி சிலருக்கான வரப்பிரசாதமாக இல்லாமல், முழுமையாக மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற மத்திய மாகாண நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் 2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளில் ஒவ்வொரு பாடத்துறையிலும் சிறந்த திறமைகளை...

புதிய கல்வி சீர்திருத்த முன்னெடுப்பு தொடர்பாக ஜனாதிபதி வலியுறுத்தல்..!!

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். உத்தேச புதிய கல்வி சீர்திருத்த செயற்பாடு குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற...

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு..!

வடக்கு, கிழக்கு மக்களிடமிருந்து காணிகளைப் பெறுவதற்கு அரசாங்கம் எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நில உரிமையை வைத்திருப்பவர்களிடம் விரைவாக ஒப்படைப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு,...

7 ஆம் திகதி ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் வெற்றியை கொண்டாடுங்கள்- ஹரிணி அமரசூரிய..!

மே மாதம் 7 ஆம் திகதி வெற்றியை ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் கொண்டாடுங்கள் என்றும் மோசடிக்கு எதிராக சமூகம் எழுந்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஹோமாகம, கிரிவந்த்துடுவ, தொம்பே, நாவலமுல்ல மற்றும் மாகம்மன ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். இங்கு...

வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது தேசிய தேவையாகும் – ஹரிணி அமரசூரிய

வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது பௌதீக ஆபத்துகளை அகற்றுவது மட்டுமல்ல, மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு தேசிய தேவையாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பில் உள்ள காலி முகத்திடல் ஹோட்டலில் நகர அபிவிருத்தி, நிர்மாணத் துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த...

மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி விஜயம் – வேட்பாளர்களை ஆதரித்து உரை..!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்றைய தினம் சனிக்கிழமை (12/04/2025) மதியம் மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். தேசிய மக்கள் சக்தியின் நானாட்டான் பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்து நேற்றைய தினம் சனிக்கிழமை...

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் – பிரதமர் ஹரிணி..!

நாட்டு மக்களின் அபிலாசையுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். யாப்புருவாக்க பணிகள்  வினைத்திறனான  வகையில் முன்னெடுக்கப்படும். மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து புதிய யாப்பு உருவாக்க பணிகளை மேற்கொள்வோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09/04/2025) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத்   தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு...

IMF தூதுக்குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு..!

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு நேற்று திங்கட்கிழமை (07/04/2025) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து, நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவிலான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கையின் இதுவரையிலான முன்னேற்றம் மற்றும் நாட்டின் எதிர்கால பொருளாதார இலக்குகளை அடைய தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img