அரசாங்கம், நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் பயணத்திற்கு முன் அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அறிவித்துள்ளது.
ஆனால், இத்திட்டத்திற்கு பேருந்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உரிய ஆய்வு இல்லாமல் முடிவெடுக்கக் கூடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.
திட்டம் சரியான வழிமுறைகள் இன்றி அமுல்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் பேருந்து சேவை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.








