நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ஜீப் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here