ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்துள்ளது.

இதன்படி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக மே மாதத்திற்கான ஐசிசி_யின் சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து தெரிவாகியிருந்தார்.

இந்த நிலையில் ஐசிசி_யின் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்காக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்துவுடன், இந்திய மகளிர் அணியின் ஸ்ருதி மந்தனா மற்றும் செபாலி வர்மா ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டனர்.

இதனையடுத்து கடந்த தொடர்களில் சமரி அத்தபத்து வெளிப்படுத்திய சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக அவர் குறித்த விருதை தன்வசப்படுத்தியுள்ளார்.

இதேவேளை ஜூலை மாததிற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கஸ் அட்கின்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் ஜூலை மாதத்திற்கான ஐசிசி_யின் சிறந்த வீரராக தெரிவாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here