இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷுடன் நேற்று (21) சந்தித்த போதே, இனவாதத்தை தூண்டும் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

30 வருட யுத்தம் முடிந்தபின்பும் வடக்கு மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும், கடந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு குறைந்த முக்கியத்துவமே அளித்தன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாகுபாடின்றி அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும், இன ரீதியாக மக்களை மீண்டும் பிளப்பதற்கு இடமளிக்கப்பட முடியாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here