நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்,  கலகொட அத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உட்பட ஒரு குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட ஞானசார தேருக்கு 2018 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் 6 வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது.

அந்த தண்டனையில் இருந்து ஞானசார தேரை விடுவித்து அப்போதைய ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here