2030 ஆம் ஆண்டுக்குள், டிஜிட்டல் ஏற்றுமதிகள் மூலம் மட்டும் இலங்கை ஆண்டுதோறும் 5 பில்லியன் டொலரை ஈட்ட முடியும் என்று டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் டொக்டர் ஹான்ஸ் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற (05) டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் உச்சி மாநாட்டின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.
டிஜிட்டல் மயமாக்கலை முழுமையாக ஏற்றுக்கொள்வதன் மூலம், அதன் அடிப்படை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் எனக் குறிப்பிட்டார்.
ஆண்டுதோறும் கூடுதலாக 1-2% உயர்வைக் காண முடியும் என்றும், டிஜிட்டல் ஏற்றுமதிகள் இந்த நிலையை எட்டினால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த 1-2% அதிகரிப்பு இரட்டிப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய இலக்கான 200,000 ஐத் தாண்டி இலங்கையின் டிஜிட்டல் பணியாளர்களை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை விஜயசூரிய வலியுறுத்தினார்.
டிஜிட்டல் பணியாளர்களை 20% ஆக அதிகரிப்பது ஆண்டுதோறும் டிஜிட்டல் ஏற்றுமதி வருவாயில் 15 பில்லியன் டொலரை ஈட்ட வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் முறையில் வணிகம் செய்வதற்கான செலவுகளைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் விஜயசூரிய எடுத்துரைத்தார்.








