பாதாள உலக கும்பலை சேர்ந்தவர் என கூறப்படும் ரஞ்சித் குமார் என்ற “கொண்ட ரஞ்சி” டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த நிலையில் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்டார்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் “கொண்ட ரஞ்சி” டுபாயில் கைது செய்யப்பட்டிருந்தார். இலங்கை அதிகாரிகள் அவரை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என பொலிசாரினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக கூறப்படும் விசாரணை ஒன்றுடனும் அவர் தொடர்புடையவர் என விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.








