மலேசியா சரவாக் மாநிலத்தின் லோங் லெலாங் விமான நிலையத்திற்கு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை மருத்துவ சேவை வழங்கும் ப்ளையிங் டொக்டர் ஹெலிகோப்டர்  விபத்துக்குள்ளானது.

இதில் விமானி உட்பட சுகாதார அமைச்சின் 4 ஊழியர்கள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு மருத்துவ அதிகாரி, ஒரு உதவி மருத்துவ அதிகாரி மற்றும் 2 செவிலியர்கள் அடங்குவர்.

கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை மற்றும் அவசர போக்குவரத்தை வழங்கும் சேவை விமானமாக இது இயங்கியது.

பாதிக்கப்பட்ட விமானத்துக்கு அருகில் உள்ள இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன. விபத்து நடந்த பகுதிக்கு வீதி வழியாக 10 மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது என மீட்பு குழு தெரிவித்துள்ளது.

விமான விபத்து குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here