நாட்டின் சில பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா,

டெங்குவை பரப்பும் நுளம்புகள் மூலமாகவும் சிக்கன்குன்யா பரவுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

நீண்ட வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக, பலர் விடுமுறையில் சென்றுள்ளதாகவும், தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்யாத காரணத்தால்

இதன் காரணமாக, நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் செய்யும் திறன் இல்லாததால், அவை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்கள் ஒரே நுளம்புகளால் பரவுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், இதன் காரணமாக, சுற்றுப்புறத்தை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் நுளம்புகளை பெருக்கத்தைத் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here