சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கொக்கைனுடன் ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இன்று (4/20/2025) காலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 29 வயதானவர் ஆவார்.
குறித்த நபர் கொண்டு வந்த கொக்கைன் 4 கிலோகிராம் 855 கிராம் எடை கொண்டது எனவும் அதன் மதிப்பு 240 மில்லியன் ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதியையும், பயணியையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








