இந்தியாவின் டெல்லியின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்ததால் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் சீரற்ற வானிலை காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளமையால் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன
இதேவேளை புயல் காரணமாக 25க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
டெல்லி விமான நிலையத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி , நேற்றிரவு (24) ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக விமானசேவைகள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து சரிபார்க்குமாறு விமான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.








