Tuesday, June 30, 2026
No menu items!

கனமழை

100 மி.மீ கனமழை பெய்யும் சாத்தியம்!

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ கனமழை பெய்ய...

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கனமழை; பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம் பெற்று இன்றைய தினம் (26.11.2025) இலங்கையின் தென்பகுதியூடாக ( அம்பாந்தோட்டைக்கு அண்மையாக) வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கும். இந்த தாழமுக்கம் எதிர்வரும் 27.11.2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று அன்றைய...

பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளி: 58 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய “கல்மேகி” என்ற சூறாவளியால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன மற்றும் பல வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளி தாக்கத்தால் 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும்,...

நாட்டில் கனமழை தாக்கம் – இரண்டு உயிரிழப்புகள், நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு!!

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, கொழும்பில் பல வீதிகளில் வெள்ளநீர் தேங்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலத்த மழையினால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை இயக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி, சீரற்ற வானிலை காரணமாக  இதுவரை இரண்டு உயிரிழப்புகள்...

மழை நீர் தேங்கி நிற்கும் பளை பொதுச்சந்தை.!

பச்சிளைப்பள்ளி பளை பொது சந்தையில் நேற்றைய தினமும்,  இன்றய தினமும் பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் தேங்கி  காணப்படுகின்றது இதனால் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினமும் பொதுச்சந்தைக்கு வருகைதரும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பச்சிளப்பள்ளி பொதுச்சந்தை ஆனது தற்போது புரணரமைப்பு வேலைகள் நடைபெறுவதோடு ஆங்காங்கு கட்டிட பொருட்கள் குவித்த வண்ணமும்...

டெல்லியில் விமான சேவைகள் பாதிப்பு..!

இந்தியாவின் டெல்லியின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்ததால் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில்  சீரற்ற வானிலை காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய பகுதிகளில் தண்ணீர்  தேங்கியுள்ளமையால் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன இதேவேளை புயல் காரணமாக 25க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன. டெல்லி விமான நிலையத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி , நேற்றிரவு (24) ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக...

பெங்களூரில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழப்பு..!

பெங்களூரில் 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரில் மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதோடு இவ் வெள்ளத்தில்...

சாலை மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

கனமழை பெய்யும் காலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது வாகன ஓட்டிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சாலை மேம்பாட்டு ஆணையம் (RDA) பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. மழைக்காலங்களில் அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லுமாறு சாலை மேம்பாட்டு ஆணையத்தின் அதிவேக நெடுஞ்சாலை செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புப் பிரிவின் துணை இயக்குநர் ஜெனரல்...

செந்நிறமாக மாறிய ஹோர்மோஸ் தீவு..!

ஈரானின் ஹோர்மோஸ் தீவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வெள்ளப்பெருக்கில் பாய்ந்தோடும் நீர் செந்நிறமாக மாறியுள்ளதாகவும் ,இதனால் அப்பகுதியில் கடலும் செந்நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹோர்மோஸ் தீவில் காணப்படும் மண்ணில் அதிக இரும்பு ஆக்சைட் இருப்பதால் இவ்வாறு வெள்ளநீர் செந்நிறமாக மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எவ்வாறாயினும்,செந்நிறமாக...

இன்றைய நாளுக்கான வானிலை..!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில்...
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img