உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இதன்படி கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (23.05.2025) ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் ரஞ்சித் அலுவிகார தனது ரத்தோட்டை தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதே போல மாகாண சபை முன்னாள் அமைச்சர் சம்பிக்க விஜேரட்ன தம்புள்ளை அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரொவபொத்தானை அமைப்பாளர் அனுர புத்திக்க தனது அமைப்பாளர் பதவியை இராஜிநாமா செய்வதாக இன்றைய தினம் அறிவித்துள்ளார்.








