காசா பகுதியைத் தனது நாடு ஆக்கிரமிக்கும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிக்கை நகைப்புக்குரியது என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் பாலஸ்தீனத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான நம்பிக்கைகளைச் சிதைப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜோர்டான் மன்னர் அப்துல்லாவைச் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , தனது நாடு விரைவில் காசா பகுதியை ஆக்கிரமிக்கும் என்றும் கூறினார்.
இருப்பினும், ஜோர்டான் அமெரிக்காவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.








