காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் வண்டி சாரதியின் அதிக வேகம் மற்றும் கடுமையான கவனக்குறைவே 11 வாகனங்கள் சம்பந்தப்பட்ட தெற்கு அதிவேக வீதி விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து கெலனிகம மற்றும் தொடங்கொடைக்கு இடையில் காலை சுமார் 6:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கெப் வண்டி திடீரென நிறுத்தப்பட்டு  (பிரேக் பிடித்து), அதிவேக வீதி தடுப்பில் மோதி, பின்னர் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துடன் மோதியுள்ளது.

இந்த மோதல் அக்குரஸ்ஸ-கொழும்பு பயணிகள் பேருந்து மற்றும் எட்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட தொடர் விபத்துக் களுக்கு

முன்னர் தெரிவிக்கப்பட்டபடி, எட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 15 பேர் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாடசாலை மாணவர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் சிறு காயங்களுடன் தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here