அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பிற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டுள்ளது.

2026 FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கான குழுக்களைத் தெரிவு செய்யும் குலுக்கல் நிகழ்வு அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெற்றது.

இதன் போதே, இந்தவிருது அவருக்கு வழங்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவினால் இந்தவருடம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதில், முதலாவது வெற்றியாளராக ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

FIFA சமாதான விருது , சமாதானத்திற்காக விசேட மற்றும் அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைத்த ஒருவருக்கே வழங்கப்படுகின்றது.

அதேவேளை தனக்கு நோபல் பரிசு வழக்கப்பட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வந்த நிலையில், அது அவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here