நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.எம்.மகிந்த சிறிவர்தன இன்று (20) மீண்டும் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவதிலும், நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை வெற்றிகரமாகச் செய்வதிலும் அவர் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார்.

திறைசேரியின் பிரதிச் செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here